உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி!

பழநி உண்டியல் வசூல் ரூ.1.48 கோடி!

பழநி: பழநியில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்.,6வரை பங்குனிஉத்திர விழாநடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உண்டியல்கள் நிறைந்தது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 850ம், தங்கம் 452 கிராம், வெள்ளி 4 ஆயிரத்து 635 கிராம், வெளிநாட்டு கரன்சி 103 வசூலாகியுள்ளது. தங்கம், வெள்ளியில் ஆன தாலி, மோதிரம், ஆள்ரூபம், பாதம், கொலுசுகள், காசுகள், வீடு, கார் போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !