உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில் 90 மணி நேரம் தொடர் பஜனை!

ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில் 90 மணி நேரம் தொடர் பஜனை!

திருப்பூர் : ஸ்ரீசத்ய சாயி பாபா, 90வது பிறந்த தின விழா மற்றும் உலக நன்மை வேண்டி, திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், 90 மணி நேரம் தொடர்ந்து நடத்தப்படும் அகண்ட பஜனை நிகழ்ச்சி, திருப்பூர் ராக்கியாபாளைம் ஸ்ரீசாயி லட்சுமி மையத்தில் நேற்று துவங்கியது. மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். நேற்று மாலை 4:00 மணிக்கு, மங்கள இசை; 4:30 மணிக்கு வேதபாராயணம்; 5:00 மணிக்கு, சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, அனைத்து சமிதிகளை சேர்ந்த பாலவிகாஸ் குழந்தைகளின் பஜனையுடன் துவங்கியது.தொடர்ந்து பல்வேறு சமிதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்; வரும் 12 வரை, இரவு, பகல் என இடைவிடாமல் பஜனை நடக்கும்; அன்று மதியம் 12:00 மணிக்கு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து, பகவானின் பிறந்த நாள் செய்தி, மகா மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெறும்.திருப்பூர் பகுதியிலுள்ள சமிதிகள், வால்பாறை, கோட்டூர்மலையாண்டிபட்டணம், பொள்ளாச்சி, உடுமலை, பல்லடம், சூலூர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பஜனை மண்டலியை சேர்ந்த 1,300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !