உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசி கோவில் இசை நிகழ்ச்சி: பாக்.,பாடகர் பங்கேற்பு!

வாரணாசி கோவில் இசை நிகழ்ச்சி: பாக்.,பாடகர் பங்கேற்பு!

வாரணாசி: உ.பி.,மாநிலம் வாரணாசியில் உள்ளசங்கத் மோச்சன் கோவில் திருவிழாவில் பாக்..பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சங்கத் மோச்சன் கோவி்லில் இசை விழா வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் 50க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தாண்டு முதன்முறையாக பாகிஸ்தானை சேர்ந்த கஜல் பாடகர் உஸ்தாத் குலாம் அலி பங்கேற்க உள்ளார். இசை நிகழ்ச்சி குறித்து கோயில் தலைமை குரு விஷ்வாம்பர் நாத் மிஸ்ரா கூறுகையில் , சங்கத் மோச்சன் கோயிலில் முதல் முறையாகப் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பணிச்சுமை காரணமாக தன்னால் கோவில் விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாது என தெரிவித்துள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !