உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 15ல் பிரம்மோற்சவம் துவக்கம்

ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 15ல் பிரம்மோற்சவம் துவக்கம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ராமானுஜர் அவதார உற்சவம் வரும், 15ம் தேதி துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ஆதிகேசவப்பெருமாள், ராமானுஜர், ராமர், வேணுகோபால், எதிராஜநாதவள்ளி தாயார், கூரத்தாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஆண்டுதோறும் சித்திரை மாதம், 20 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான, ராமானுஜர் அவதார உற்சவம் வரும், 15ம் தேதி துவங்கி, 25ம் தேதி நிறைவடைகிறது. ஆதிகேசவப்பெருமாள் பிரம்மோற்சவம், மே 2ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கி, 11ம் தேதி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !