உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீடாமங்கலகம் விசாலாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

நீடாமங்கலகம் விசாலாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

திருவாரூர்: நீடாமங்கலகம் அருகே நகர் நடுப்படுகையில் புதிதாக கட்டப்பட்ட லிங்கத் தடி விசாலாட்சி அம்மன்கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் அப்பகுதியி னர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்லகம் அருகே நகர் நடுப்படுகையில் லிங்க த்த டி விவசாலாட்சி கோவில் கொண்டு அருள் பாலித்தார். அப்பகுதியினர் ராஜேந்திரன் தலைமையில் திருப்பணிக்குழு அமைத்து புதியதாக கோவில் கட் டினர். இதற்கான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9 ம்தேதி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமம் துங்கியது.  அதன் பின் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை 2 வது கால யாக பூஜை துவங்கியது. அதன் பின் தத்துவார்ச்சனம் நடந்தது. காலை 9.15 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனையுடன் காலம் 2 வுடன் கடம்புறப் பாடு துவங்கியது. காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் சேர்மன் எம்.ஆர்.ராஜேந்திரன், அம்மா அறக்கட்டளை நிறுவனர் குமார் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !