தனுஷ்கோடி ஜடாயு தீர்த்த கோயிலில் பாலாலய பூஜை!
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே உள்ள ஜடாயு தீர்த்த சிவன் கோயிலில், ரூ.4.5 லட்சத்தில் திருப்பணிகள் துவங்கிட பாலாலய பூஜை நடந்தது. ராமேஸ்வரத்தில் இருந்து 7 கி.மீ., துõரத்தில், தனுஷ்கோடி தேசிய சாலை அருகே ஜாடயு தீர்த்த சிவன் கோயில் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் சிவபெருமான் தலையில் இருந்து வரும் நீரில் உருவானதால், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பாவம் நீங்கிட ஸ்ரீ ராமர் இங்கு நீராடி புதுபொலிவு பெற்றதாக, ராமாயண வரலாற்றில் கூறப்படுகிறது. இத் தீர்த்தத்தில், வரும் 2016 ல் மகாமகம் நடைபெற உள்ளதால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில், ரூ.4.50 லட்சத்தில் திருப்பணிகள் துவக்கப்பட உள்ளது. இதற்காக, ஜாடயு தீர்த்த கோயிலில் உள்ள சித்தி புத்தி விநாயகர், ஞானேஸ்வரர், அங்ஞானேஸ்வரர் சன்னதியில், கோயில் குருக்கள் விஜயகுமார் பாலாலய பூஜை, மகா தீபாரதனை நடத்தினார். இதில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுனன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், சுவாமி பிரணவநந்தா, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன் மற்றும் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.