சிதம்பர மான்மியம்
ADDED :3861 days ago
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர் படிந்து
தீமையுறு தம்பவம் ஒழித்திடும் காவிரித்
தெய்வமா நதியின் வடபால்
நீர்பெருகு நிவவென அடைந்தெல்லை யுறுதலால்
நின்மலத் துவம ருள்தலம்
நிலைபெறு பகீரதி யணைந்துசிவ கங்கையென
நின்பெயர் அடைந்து யர்தலம்
ஏர்பெருகு சிவகலைகள் ஆயிரம் நிறைந்ததலம்
இதய மத்திய மாந்தலம்
எண்ணவிதி நண்ணவுரை பண்ணவுயர் போகம்வீடு
எளிதின் அருளிய நற்றலம்
சேர்அகில உயிரெலாம் சிவமாக நீநடம்
செய்பதிக் கிணைய துண்டோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.