நாகேஸ்வரசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா!
ADDED :3864 days ago
ஆர்.கே.பேட்டை :நாகபூண்டி நாகேஸ்வரசுவாமி கோவிலில், வரும் 23ம் தேதி, சித்திரை திருவிழா துவங்குகிறது. 29ம் தேதி, தேரில், உற்சவர் வீதியுலா எழுந்தருளுகிறார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிநாகபூண்டியில், நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இது, ராகு தோஷ பரிகார தலம்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில், சித்திரை திருவிழா, வரும் 23ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. மறுநாள் காலை கொடியேற்றமும்; இரவு, அம்ச வாகனத்திலும் உற்சவர் வீதியுலா எழுந்தருளுகிறார். வரும் மே மாதம் 7ம் தேதி வரை, தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில், தினசரி, யானை குதிரை, ராவணேஸ்வரன், அதிகார நந்தி உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். முக்கிய உற்சவமான தேர் திருவிழா, 29ம் தேதி காலை நடைபெற உள்ளது. 30ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.