தர்மராஜா கோவிலில் துரியோதனன் படுகளம்!
ADDED :3942 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, முசரவாக்கம் பகுதியில் நடந்து வரும் அக்னி வசந்த விழாவில் நேற்று, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.காஞ்சிபுரம் அடுத்துள்ள முசரவாக்கம் பகுதியில், திரவுபதி அம்மன் சமேத தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அக்னி வசந்த விழா, கடந்த 25ம் தேதி துவங்கியது. இந்த விழாவில், தினமும் மகாபாரதம் சொற்பொழிவு, ராஜசூய யாகம், பகடை துகில், அர்ச்சுனன் தபசு, விராடபருவம், கிருஷ்ணன் துாது, அரவான் கள பலி, கர்ண மோட்சம் போன்ற நாடகங்கள் நடத்தப்பட்டன.நேற்று காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும்; மாலை தீ மிதி விழாவும் நடந்தன.இன்று பொறுமைக்கோர் பொன்முடி பட்டாபிஷேகம் சொற்பொழிவும்; இரவு சுவாமி ஊர்வலமும் நடைபெறும்.