தந்தி மாரியம்மன் கோவில் பூ குண்ட திருவிழாவில் பரவசம்
ADDED :3942 days ago
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர். குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 3ம் தேதி சித்திரை தேர் திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, 41வது ஆண்டு பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் ஊர்வலம் துவங்கி, பாலசுப்ரமணிய கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூகுண்டம் இறங்கினர். இதில், கை குழந்தைகளை சுமந்தபடி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஜாதிமத பேதமின்றி ஒற்றுமையுடன் திருவிழா சிறப்பாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.