திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக்கவசம்!
ADDED :3942 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், மற்ற மூலவர்கள் கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் அன்னதானம், சொற்பொழிவு, இரவு தங்க ரத உலா, திருவிளக்கு பூஜைகள் நடக்கின்றன என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.