உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் திருவிழா!

திரவுபதியம்மன் கோவில் திருவிழா!

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், திரவுபதியம்மன் கோவிலில்,  465வது தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடந்த விழாவில், மாலையிடுதல் மற்றும் திருமண விழா நிகழ்ச்சிகள்  நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று தீ மிதி திருவிழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.  மாலை 6:00 மணிக்கு, கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில்,  அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !