அபய ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப விழா!
ADDED :3939 days ago
கடலூர்: கடலூர் அருகே பெரியக்காரைக்காடு சிப்காட் பகுதியில் உள்ள அபய ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 14ம் தேதி லட்சதீப விழா நடக்கிறது. கடலூர் வட்டம் பெரியக்காரைக்காடு, சிப்காட் பகுதியில் அமைந்துள்ள அபய ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர், ராமர், வலம்புரி விநாயகர் ஆகிய தெய்வங்களுக்கு வரும் 14ம் தேதி ஹோமங்களுடன், விஷேச திருமஞ்சனமும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், மாலை 6:30 மணிக்கு லட்ச தீப விழா நடக்கிறது.