வாண வேடிக்கையுடன் உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நிறைவு!
ADDED :3846 days ago
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா, கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது; ஏராளமானோர் கண்டு ரசித்தனர். உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 24ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கி யது. கடந்த, 1ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி, 9ல் தேரோட்டம் நடைபெற்றது. விழா நிறைவாக, பரிவேட்டை நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், குட்டைத்திடலில் துவங்கியது. பரிவேட்டையை கொண்டாடும் விதமாக, இரவு, 11:00 மணியளவில், வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டாசுகளின் அதிர்வேட்டு ஒரு பக்கம் முழுங்க, வண்ணமயமான வாண வேடிக்கைகள், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.