உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் நாளை தீர்த்தவாரி

பிள்ளையார்பட்டியில் நாளை தீர்த்தவாரி

திருப்புத்தூர்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி நடக்கிறது. மன்மத ஆண்டு பிறப்பை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். காலை 5 மணிக்கு மூலவர் தங்க கவசத்தில் அருள்பாலிப்பார். காலை 9 மணிக்கு அங்குசத்தேவரும்,அஸ்திரத்தேவரும் கோயிலிலிருந்து புறப்பாடாகி, திருக்குளத்தில் எழுந்தருளுவர். அங்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். தொடர்ந்து குள தீர்த்தத்தில் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி நடைபெறும். பகலில் நடைசார்த்தப்படாமல் இரவு வரை பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். விநாயகர்,சந்திரசேகரர்-கவுரிஅம்பாள்,சண்டீகேஸ்வரர் பிரகார வலம் வருவர். புத்தாண்டை முன்னிட்டு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர்,அன்னதான,சுகாதார,நிழற் கொட்டகை வசதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி அரு.நாராயணன் செட்டியார், காரைக்குடி வீர.முத்துக்கருப்பன் செட்டியார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !