நாளை அய்யப்ப சுவாமிக்கு வெள்ளிக்கவசம்
ADDED :3846 days ago
ஊத்துக்கோட்டை, : அய்யப்ப சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கும் விழா, நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டையில் ஆனந்தவல்லி உடனுறை திருநீலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் அய்யப்ப சுவாமி சன்னிதி உள்ளது. இங்குள்ள மூலவர் அய்யப்ப சுவாமிக்கு வெள்ளிக்கவசம் செய்ய முடிவெடுத்து, பக்தர்களிடம் இருந்து வெள்ளி சேகரித்து, வெள்ளிக்கவசம் செய்யப்பட்டது. பணிகள் முடிந்து, நாளை, அய்யப்ப சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும், 14ம் தேதி, காலை, 6:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து 8:01 மணிக்கு, அய்யப்ப சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படுகிறது.