கருப்பண்ண ஸ்வாமி கோவிலில் ஏப்., 18ல் பூச்சொரிதல் விழா
ADDED :3845 days ago
மோகனூர் : மோகனூர், குறிக்கார கருப்பண்ண ஸ்வாமி கோவிலில், ஏப்ரல், 18ம் தேதி பூச்சொரிதல் விழா, கோலாகலமாக நடக்கிறது. மோகனூர், சுப்ரமணியபுரத்தில் குறிக்கார கருப்பண்ணஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், விழாக்குழு சார்பில், இரண்டாம் ஆண்டு பூச்சொரிதல் விழா, வரும், 18ம் தேதி நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, கோவிலில் இருந்து, பூத்தட்டு எடுத்துக் கொண்டு பக்தர்கள், மோகனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைகின்றனர். அங்கு, ஸ்வாமிக்கு பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா, தங்கவேல் மற்றும் விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.