உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

திருக்கோவிலுார் கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு!

திருக்கோவிலுார்: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, திருக்கோவிலுார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருக்கோவிலுார் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை  நடந்தது. கிழக்கு வீதி ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 :00  மணிக்கு, லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு, பெருமாள் கருடவாகனத்தில்   வீதியுலா நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். கீழையூர்  வீரட்டானேஸ்வரர் கோவிலில் காலை 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு  அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர் மகாசக்தி மாரியம்மனுக்கு, காலை 6:00 மணிக்கு அபிஷேகம்,  அலங்காரம், தீபாராதனையும், சக்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !