சோலைமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜை!
ADDED :3831 days ago
அழகர்கோவில் : தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. தஞ்சாவூர் பாலசுப்பிரமணியனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலில் 18 வகை அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு தங்க காப்பு, வைர வேல் சாத்தப்பட்டன. பகலில் மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, கோயிலை வலம் வந்தார். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.