மேல்மலையனூர் கோவிலில் அம்மனுக்கு தங்க கவசம்!
ADDED :4052 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். தமிழ் புத்தாண்டு தினமான நேற்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், பி. ஏரிக்கரை முருகன் கோவில், பீரங்கிமேடு அரு ணாச்சலேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.