உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போஜசாலாவில் மகாவியஜய் மகோத்சவம் கொண்டாட்டம்; குவிந்த பக்தர்கள்

போஜசாலாவில் மகாவியஜய் மகோத்சவம் கொண்டாட்டம்; குவிந்த பக்தர்கள்

மத்தியப் பிரதேசம்:  இந்தியத் தொல்லியல் துறை அனுமதியைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தின் போஜசாலாவில்  மகாவியஜய் மகோத்சவம் கொண்டாட்டம் நடைபெற்றது.


மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போஜசாலா வளாகத்தில், இந்து அமைப்புகள் இன்று செவ்வாய்க்கிழமையன்று ஒரு "வெற்றிக் கொண்டாட்டத்தை" ஏற்பாடு செய்தன. இந்த நினைவுச் சின்னத்தில் வழிபாடு நடத்துவதற்கு, இந்து சமூகத்தினருக்கு அனுமதி அளித்து இந்தியத் தொல்லியல் துறை உத்தரவிட்ட சில நாட்களிலேயே இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது. "மகாவியஜய் மகோத்சவம்" (பெரும் வெற்றிக் கொண்டாட்டம்) நிகழ்வு, வாக்தேவி (சரஸ்வதி) அம்மனுக்குச் சிறப்புப் பிரார்த்தனைகள் மற்றும் "அகண்ட ஜோதி" ஏற்றி வைக்கும் சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தார் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அந்த வளாகத்தில் திரண்டனர். 


இது குறித்து போஜ உத்சவ சமிதியைச் சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது; , போஜசாலாவில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு "சத்தியாகிரகப் போராட்டம்" நடத்தப்படுவது வழக்கம் என்றும்; மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் முடிவுகளை முன்னிட்டு, இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி ஒரு "மகாசத்தியாகிரகமாக" அனுசரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்த வெற்றிக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினத்தின் பிற்பகுதியில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சமிதியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !