வைகாசி முதல் செவ்வாய்: சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :136 days ago
கோவை; வைகாசி மாதம் முதல் செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.