பாப்பம்பட்டி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா; யாக பூஜை
சூலூர்: பாப்பம்பட்டி ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.
சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில், பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் இருந்த மாகாளியம்மன் கோவில் பழமையானது. ரோடு விரிவாக்க பணிகள் நடந்ததால், தென்புறம் புதிதாக கோவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. புதிதாக கருவறை, அர்த்த மண்டபம், ஸ்ரீ மாகாளியம்மன், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர், பைரவர், நவ கோள்கள் என அனைத்து தெய்வங்களுக்கும் புது சன்னதிகள் கட்டும் திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. நேற்று காலை, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், முளைப்பாலிகை இடுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, முதல் கால ஹோமம் நடந்தது. பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று இரண்டு கால ஹோமம் முடிந்து, அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வு நடக்கிறது. நாளை காலை, 7:30 மணிக்கு, நான்காம் கால ஹோமம் முடிந்து, 9:30 மணிக்கு, விமானத்துக்கு ம், 9:45 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.