தமிழ் புத்தாண்டு நாளில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி!
ADDED :3830 days ago
துறையூர்: தமிழ் புத்தாண்டான சித்திரை மாத முதல் நாளன்று, முருகூர் சிவன் கோவிலில் உள்ள நந்தி மற்றும் சிவலிங்கத்தின் மீது, சூரிய ஒளி நேரடியாக பட்டதால், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த முருகூரில் திருச்சிற்றம்பலம் ஸமேத சிவகாமசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்க ஆண்டுதேறும் பங்குனி மாதம் 29, 30 மற்றும் சித்திரை முதல் நாளன்று, சிவலிங்கம் மீது, சூரிய ஒளி படுவது சிறப்பாகும்.
நடப்பாண்டு சூரிய பகவானுக்கு உகந்த ராசியில், தமிழ்புத்தாண்டு பிறக்கும் ராசியும் ஒன்றாக வந்ததால், நேற்று காலை 6 மணிக்கு, சிவலிங்கம், நந்தியின் மீது சூரியனின் ஒளி பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.