உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் கோவிலில் பால் அபிஷேக வழிபாடு

சின்னசேலம் கோவிலில் பால் அபிஷேக வழிபாடு

சின்னசேலம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சின்னசேலம் பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சின்னசேலம் திரவுபதி அம்மன் கோவிலில் மன்மத வருடப்பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து 51 லிட்டர் பால் அபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மகாமேருக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் சிறப்பு அலங் காரம் செய்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !