உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் பகுதியில் புத்தாண்டு சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம் பகுதியில் புத்தாண்டு சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம்: தமிழ்புத்தாண்டையொட்டி ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ரிஷிவந்தியத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. மூலவர் சுயம்புலிங்கத்திற்கு காலை 7 மணியளவில் தேனபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை நடந்தது. திருவரங்கம் கிராமத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த வைகுண்ட அரங்கநாதபெருமாள் கோவிலில் மூலவர் அரங்கநாதபெருமாள் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி பொது மக்கள் கூட்டம், கோவில்களில் அதிகளவில் குவிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !