குண்டூரில் சகஸ்ர கலசாபிஷேகம்!
ADDED :3886 days ago
திருப்பதி: திருமலையில் உள்ள சீனிவாசப்பெருமாளுக்கு வருடம் முழுவதும் சுமார் 450ற்கும் மேற்பட்ட விசேஷங்கள் நடைபெறுகிறது. இதில் தேர்ந்தெடுத்த சில நிகழ்வுகளை, தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் திருமலையில் நடத்தப்படுவது போல தேவஸ்தானம் நடத்தி வருகிறது. ஆந்திராவை தாண்டி தமிழகம் கர்நாடகா மாநிலங்களில் நடந்துவரும் திருக்கல்யாணம் வைபவம் அமெரிக்காவிலும் கூட நடந்துவிட்டது.அந்த வகையில் பிரபல நிகழ்வான சகஸ்ர கலாசாபிஷேகம் குண்டூரில் நடந்தது. 1008 வெள்ளி குடங்களில் பக்தர்கள் கொண்டுவந்த புனித நீர் வெள்ளியால் செய்யப்பட்டிருந்த மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏாராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.