நாகை கோவில்களில் சிறப்பு வழிபாடு!
நாகப்பட்டினம்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாளான நேற்று பிறந்தது. மன்மத ஆண்டு துவங்கியதை முன்னிட்டு, நாகை மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நாகை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீலாயதாட்சியம்மன்,சிக்கல் சிங்காரவேலவர்,திருப்புகலுõர் அக்னீஸ்வரர் கோவில் மற்றும் பழமையான கோவில்களான நெல்லுக்கடை மாரியம்மன், ஏழைப்பிள்ளையார் கோவில், உத்திரங்குடி காமாட்சி அம்மன், மோகனுõர் முத்துமாரியம்மன், அனந்தமங்களம் மாரியம்மன், புதுப்பட்டினம் மாதானம் காளியம்மன், கரியாப்பட்டினம் வடமழை மாரியம்மன்,கல்லார் கற்பக மாரியம்மன், தெற்கு பொய்கை நல்லுõர் பால்மொழியம்மன் போன்ற கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தெற்கு பொய்கைநல்லுõர் பால்மொழியம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது.கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.