தரைகாத்த காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3827 days ago
கடலூர்: கடலூர் தரைகாத்த காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. கடலூர், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் தமிழ் வருட பிறப்பையொட்டி அம்மனுக்கு நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.