உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூண்டில் வீரனார் கோவில் கும்பாபிஷேக விழா!

தூண்டில் வீரனார் கோவில் கும்பாபிஷேக விழா!

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி ரோட்டில் அமைந்துள்ள தூண்டில் வீரனார் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர்  தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் பூர்வாங்க பூஜைகள், கணபதி ஹோமம், இரவு 8:00  மணிக்கு முதல் கால பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, காலை 11:00 மணிக்கு கலசம் புறப் பாடும், தொடர்ந்து புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழ ங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !