காரைக்கால் அய்யப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3828 days ago
காரைக்கால்: காரைக்கால் அய்யப்பன் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள பச்சூர் பகுதியில் ரூ 25 லட்சத்திற்கு புதிதாக அய்யப்பன் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் 3600 சதுர அடியில் கேரள மாநில சபரிமலை அய்யப்பன் கோவில் வடிவமைப்பில் திருப்பணி செய்து கன்னிமூலை கணபதி, அய்யப்பன், மஞ்சமாதா ஆகிய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று சித்திரை விஷூவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு நாணயங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்யப்ப பக்த சபையினர் செய்திருந்தனர்.