வாதானுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா
ADDED :3828 days ago
திருக்கனுார்: வாதானுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா நடந்தது. திருக்கனுார் அடுத்த வாதானுார் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் சித்திரை 1ம் தேதி முன்னிட்டு லட்சதீப விழா நடந்தது. அன்று காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, மாலை 6:00 மணிக்கு லட்ச தீப காட்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி மின் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாதானுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கூனிச்சம்பட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் லட்சதீப விழா நடந்தது.