உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் 23ம் தேதி கொடியேற்றம்

திரவுபதியம்மன் கோவிலில் 23ம் தேதி கொடியேற்றம்

திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ளது திரவுபதியம்மன் கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும், தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான திருவிழா, வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினசரி காலையில், மூலவர் அம்மனுக்கு சந்தனக் காப்பு, மாலையில் தீபாராதனை நடைபெறும். பிற்பகல் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை, மகா பாரதமும்; வரும் 27ம் தேதி முதல், மே 10ம் தேதி வரை, இரவு 10:00 மணிக்கு, மகா பாரத நாடகமும் நடைபெறும். வரும் 29ம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணம்; மே 1ம் தேதி, சுபத்திரை திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை மற்றும் புஷ்ப பல்லாக்கு; 4ம் தேதி, அர்ஜுனன் தபசு; 10ம் தேதி, துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !