உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ஆதிவாலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு!

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு!

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழுப்புரம் பழைய பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு ஆதிவாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நாயகர் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்தீஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் கோவில் உட்பிரகார உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !