உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் கோவிலில் லட்ச தீப திருவிழா!

பாதூர் கோவிலில் லட்ச தீப திருவிழா!

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் லட்ச தீப திரு
விழா நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு, வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. தொடர்ந்து நடந்த லட்ச தீபவிழாவில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

முன்னதாக ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கும்,ஸ்ரீப்ரசன்னவெங்கடேசப் பெருமாள் சுவாமிக்கும் திருமஞ்சனம், 11மணிக்கு ததியாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து, வடமாலை சாற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. இரவு 7மணிக்கு பெருமாள், ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் விஜயராகவ ஐய்யங்கார் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயர் கைங்கர்ய சபா உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !