திரவுபதி அம்மன் கோவிலில் கர்ணமோட்ச உற்சவம்!
ADDED :3827 days ago
பண்ருட்டி: திரவுபதி அம்மன்கோவில் கர்ணமோட்சம் உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி திரவுபதிஅம்மன் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 7ம் தேதிமுதல் உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 14ம் தேதிஅரவாண்கடபலியும், வெள்ளை யானை புறப்பாடும், 15ம்தேதி கர்ணமோட்சம் உற்சவத்தை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு பெருமாள்கருட வாகனத்தில் வீதியுலாவும் நடந்தது.
நேற்று (16ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சக்கரவர்த்தி கோட்டை உற்சவம், இன்று (17ம் தேதி) மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், வரும் 18ம் தேதி மஞ்சள்நீர் பட்டாபிஷேகம், 24ம் தேதி நிறைமணிஉற்சவமும் நடக்கிறது.