உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடம்பவனேஸ்வரர் தேருக்குமேற்கூரை அமைக்க கோரிக்கை!

கடம்பவனேஸ்வரர் தேருக்குமேற்கூரை அமைக்க கோரிக்கை!

குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு, காசிக்கு செல்லும் பக்தர்கள் வருகின்றனர். காசிக்கு நிகரான ஸ்தலம் என்பதால், கடம்பவனேஸ்வரர் கோவில் காவிரியின் தென்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

தைப்பூச திருவிழாவில், திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு கிராம ஸ்வாமிகள் சந்திப்பு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி, மாசி மாதம் நடக்கும் தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். கடந்த, 11 ஆண்டுகளாக தேர் பழுது அடைந்ததால் தேரோடட்டம் நடைபெறாமல் இருந்தது. பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையால், இந்து சமய அறநிலையத்துறை மூலம், 25 லட்சம் மதிப்பில் தேர் புதுப்பிக்கப்பட்டது. கடந்த மாசிமகத்தில் தேரோட்டம் நடந்தது.தேரோட்டத்துக்கு பின், புதுபிக்கப்பட்ட தேர் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மழையில் நனைந்து தேரின் சிற்பங்கள் சிதைந்தும். மரங்கள் வெடித்தும் பெயிண்ட் கலர்கள் மாற்றம் ஏற்படுகிறது. தேரில் தொங்கவிடப்பட்ட மணிகள் திருட்டு போகிறது. தேர் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையினர் நிரந்தர மேல்கூரை அமைக்கவேண்டும், என்பது மக்கள் மற்றும் பக்தர்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !