உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நீலமங்கலம் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை!

நீலமங்கலம் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை!

கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் துர்க்கையம்மனுக்கு 7ம் ஆண்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன்  உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கடந்த 6 ஆண்டுகளாக ராகு காலத்தில் துர்கா பூஜை நடந்து வருகிறது. தொடர்ந்து 7ம் ஆண்டு துவக்கத்தை  யொட்டி நேற்று சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தது. பெண்கள் எலுபிச்சை பழம் தீபம் ஏற்றி சுமங்கலி தாம்புலங்கள் கொடுத்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !