உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. சின்னாளபட்டி கீழக்கோட்டையில் ராமஅழகர் சுவாமி தேவஸ்தானம், மேட்டுப்பட்டியில் சுந்தரராஜ பெருமாள் திருப்பணி நலச்சங்கம் சார்பில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா நடத்தப்படும். இந்த ஆண்டு திருவிழாவின் கொடியேற்றம் இன்று நடக்கிறது. கீழக்கோட்டை : காலை 7.30 மணிக்கு, கடைவீதியில் உள்ள அக்கசாலை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்படுகிறது. சின்னாளபட்டி பிரிவில் உள்ள, பிருந்தாவன தோப்பில், ராமஅழகர் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடக்கிறது. தேவஸ்தான கமிட்டி மற்றும் நிர்வாக குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேட்டுப்பட்டி : காலை 7.30 மணிக்கு , மேட்டுப்பட்டி வள்ளுவர் நகர், வரம்தரும் கனிவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்படும். சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடக்கிறது. பின்னர், காந்தி மைதானத்தில், தசாவதார கொட்டகை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றப்படும். சுந்தரராஜ பெருமாள் திருப்பணி நலச்சங்க நிர்வாக அறங்காவலர், அறங்காவலர்கள், நிர்வாக குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !