பூதநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :4197 days ago
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு, காமாட்சி சமேத பூதநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ராமசுப்ரமணியன் குருக்கள் செய்திருந்தார்.