உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கோவில் 101வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 16ம் தேதி வரை, இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு செடல் உற்சவம் மற்றும் தேர் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, செடல் போட்டும், வடம் பிடித்து தேர் இழுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !