உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர் தின விழாவில் : சத்தமின்றி ஒரு முத்திரை!

சித்தர் தின விழாவில் : சத்தமின்றி ஒரு முத்திரை!

உலகில் பிறந்த யாரும் தன்னுடைய வயதை, தான் அறிவித்துக் கொண்டாலும், அறிவிக்காவிட்டாலும், காலத்துக்கு ஏற்றவாறு உடல் முதிர்ச்சியை பெற்றே தீரும். ஆனால், முதுமையான வயதிலும், இளைமையாக, ஆரோக்கியமாக இருக்க பல்வேறு வழிவகைகள் உண்டு. அதில், முதலிடம் யோகா கலைக்கு என்றால், அது மிகையல்ல.கோவையை சேர்ந்த யோகா கலைஞர்கள் சிவகாமி மற்றும் குழுவினர், சித்திரை முதல் தேதியில், பேரூரில் நடந்த, சித்தர்கள் தின விழாவில் தங்களின் கலையை மக்கள் முன் செய்து காண்பித்தனர். யோகா கலையின் முதிர்ச்சியையும், அதனால் வந்த இளமை, குறித்தும் குழுத் தலைவர் மற்றும் பயிற்சியாளர் சிவகாமி,46, கூறியதாவது:யோகா கலை என்பது உடலை கடுமையாக வளைத்து, நெளித்து செய்யக்கூடிய பயிற்சியாகத்தான் மக்கள் கருதுகின்றனர். ஆனால், அத்தகைய கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுவதில்லை. யோகா கலை, ஒரு விளையாட்டு என்றும் கூட பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.யோகாவை சர்வதேச விளையாட்டுகளில் இணைத்ததே, மக்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்கு தான். யோகாவில் பல வகைகள் உள்ளன. இதில், நாங்கள் பின்பற்றுவது ராஜயோகம்.இதில், மொத்தம் எட்டு நிலைகள் உள்ளன. மூன்றாம் நிலைதான் யோகாசனப்பயிற்சி. இந்த மூன்றாம் நிலைக்கு வருவதற்கு முன் ஒருவர், முதல் இரண்டு நிலைகளான சுய ஒழுக்கம் மற்றும் சமூக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். மூன்றாம் நிலையிலும், முதல் கட்டமாக மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான ஆசனங்கள் மட்டுமே பயிற்சியாக அளிக்கப்படுகிறது.யோகா கலையால், வயதை இளமையாக வைத்துக்கொள்வதை விட, நோய் இல்லா வாழ்க்கையும் வாழ முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு ஆசனங்கள் உள்ளன. யோகா புகைப்படங்களை பார்க்கும் இளைஞர்கள் கடுமையான பயிற்சியை, உடலை வருத்திக்கொண்டு செய்ய வேண்டுமா என நினைத்துக்கொண்டு, புறக்கணிக்கின்றனர்.பயிற்சியால், யோகா கலை மட்டும் வாழ்வதில்லை. கற்பவர்களும் எளிமையான, இளமையான, அமைதியான வாழ்வை வாழ முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !