பூமாரியம்மன் கோயில் சித்திரை கொடியேற்றம்
ADDED :3824 days ago
சத்திரப்பட்டி: சங்கரபாண்டியபுரம் பூமாரியம்மன் கோயில் சித்திரைப்பொங்கல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். மேலும் பெண்கள் கோயில் முன்பு தங்கள் வளர்க்கும் முளைப்பாரி நன்கு வளர கும்மி அடித்து வழிபடுவர். முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 28ல் காப்பு கட்டிய பக்தர்களின் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அக்னிசட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். விழா நாட்களின் நிறைவில் அம்மன்கோயில் திடலில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்கின்றனர்.