உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சண்டிகா பரமேஸ்வரி ஹோமம்

சண்டிகா பரமேஸ்வரி ஹோமம்

ப.வேலூர்: மாரியம்மன் ஸ்வாமிக்கு சண்டிகா பரமேஸ்வரி ஹோமம் வெகு விமரிசையாக நடந்தது. ப.வேலூர் பேட்டை மாரியம்மன் ஸ்வாமிக்கு, சண்டிகா பரமேஸ்வரி ஹோமம், 108 கலசம் மற்றும் 108 திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது. கடந்த, 15, 16ம் தேதி லலிதா ஸஹஸ்ர நாம லட்சார்ச்சனையும், நேற்று, காலை, 9 மணிக்கு, 108 கலச பூஜையும் நடந்தது. காலை, 10 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு ஆராதனையும் நடந்தது. மாலை, 6 மணிக்கு, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !