உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 தீச்சட்டி ஏந்தி வழிபாடு!

உளுந்தூர்பேட்டை கோவிலில் 1008 தீச்சட்டி ஏந்தி வழிபாடு!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 1008 தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடந்தது. உளுந்தூர்பேட்டை  ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அதனையொட்டி பக்தர்கள், வேண்டுத லுக்காக 1008 தீச்சட்டி ஏந்தி வழிபாடு நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தீபாரதனையுடன், 1008 தீச்சட்டி ஏந்திய பெண்கள் கோவிலில்  இருந்து புறப்பபட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்து வழிப்பட்டனர். அப்போது ஸ்ரீஅங்காளம்மன் சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா வந்தது. பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமா÷ னார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !