முச்சந்தியம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு!
ADDED :3825 days ago
திருவாரூர்: ஜெ.,மீண்டும் முதல்வராக வேண்டி நீடாமங்கலம் முச்சந்தியம்மனுக்கு அமைச்சர் வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் முச்சந்தி மாரியம்மன் கோவில் உள் ளது. இக்கோவில் புதிதாக கட்டி கடந்தமாதம் கும்பாபிஷேகம் நடந்தது. நேற் று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் காமராஜ் அம்மனுக்கு வெள்ளி க்க வசம் அணிவித்து ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு வழிபாடு நடத் தினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் சங்கர், மாவட்ட திட்டக்குழு உறுப் பினர் செந்தமிழ்ச் செல்வன்,நகரசெயலாளர் ஷாஜஹான் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.