வத்திராயிருப்பு குருபூஜை விழாவில் வனபோஜனம்
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் குருபூஜைவிழாவில் நடந்த வனபோஜனத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு சைவ வேளாளர் சமுதாயத்தினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்கசுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமி, பலாவடி கருப்பசாமி, வனப்பேச்சி, ஆனந்தவல்லியம்மன், மலையில் வாழ்ந்த 18 சித்தர்களுக்கு, அடிவாரமான மந்திதோப்பு பகுதியில் அன்னப்படையல் வைத்து குருபூஜை, பக்தர்களுக்கு வனபோஜனம் நடைபெறும். இந்த ஆண்டு விழாவில் சுவாமிகளின் நினைவாக லிங்கவடிவில் அன்னம் வைத்து பூஜைகள் நடந்தது. பழனிச்சாமி ஓதுவார் சுவாமிகளின் தேவாரப் பாராயணத்திற்கு பின் சுவாமிகளுக்கும், சித்தர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாராயணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து வனபோஜனமும் நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் பிச்சைராமன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் அம்மையப்பன் செய்தனர்.