உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திபுத்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

சித்திபுத்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

கடம்பத்துார்: கடம்பத்துார், சித்திபுத்தி விநாயகர் கோவிலில், வரும் 25ம் தேதி, மண்டலாபிஷேக நிறைவு விழாவும், 108 சங்காபிஷேக விழாவும் நடைபெறவுள்ளது. கடம்பத்துார், இந்தியன் வங்கி அருகில் உள்ளது சித்திபுத்தி விநாயகர் கோவில். இந்த கோவிலில், கடந்த மாதம், 8ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், தொடர்ந்து, 48 மண்டல அபிஷேகம் நடந்து வருகிறது. இதையடுத்து, வரும், 25ம் தேதி மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடக்கிறது.அதன்பின், மாலை 6:00 மணிக்கு, 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !