உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா!

மயிலம்: மயிலம்  முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை விழா   நடந்தது. மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று  சித்திரை  மாத கிரு த்திகை விழாவை  முன்னிட்டு   காலை 6 :00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  பகல் 12:00 மணிக்கு  கோவில் வளாகத்தி லுள்ள விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர், பாலசித்தர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம்,  மகா தீபாராதனை நடந்தது. பி ன்னர்  மூலவர் தங்ககவச அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத் தில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.  இரவு  8: 00 மணிக்கு  உற்சவர்  மலர்  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இரவு 9:00 மணிக்கு நடந்த கிரிவலத்தில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம்  பட்ட சுவாமி  மற்றும் கோவில்  நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !