உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிட்டாம்பூண்டி தர்காவில் சந்தனக் கூடு உற்சவம்!

சிட்டாம்பூண்டி தர்காவில் சந்தனக் கூடு உற்சவம்!

செஞ்சி: சிட்டாம்பூண்டி சையத் முஸ்தபா ஷா அவுலியா தர்காவில் சந்தனக் கூடு உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா சிட்டாம்பூண்டி சையத் முஸ்தபா ஷா அவுலியா தர்காவில் 70 வது  ஆண்டு சந்தனகூடு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அன்று மாலை 7 மணிக்கு ஹசரத் தர்பாரில்  சந்தனம் ஏற்றி இறைவேதம் ஓதினர். மலர்போர்வை சாற்றி, அனைவரின் நலனுக்காக தொழுகை நடத்தி தப்ரூக் வழங்கினர். தொடர்ந்து  பொதுமக்களுக்கு விருந்தும், இரவு 9 மணிக்கு தமிழ் இஸ்லாமிய இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.  விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்கா டிரஸ்டி ஜாவித் அலி, உருஸ் ஒருங்கிணைப்பாளர் அலிஅகமத் ஆகியோர் செய்திருந்தனர். அனந்தபுரம் போலீ சார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !